Technology News In Your Hand

4G - Jio ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு.

4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது 1977ம் ஆண்டில் ரிலையன்ஸ் ரூ.7 கோடி வருமானத்தை ஈட்டியது என்றும் மிகச்சில நிறுவனங்களே ரிலையன்ஸ் போன்று வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார். ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 4,700 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் ரிலையன்ஸ் அறிமுகம் செய்யவுள்ள 4ஜி ரக ஃபோன் குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில். இன்று அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி போன் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.


சிறப்பு என்ன?
ரூ. 0 விலையில் ஜியோ ஃபோன் கிடைக்கும் என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. ஜியோ ஃபோன் பெற விரும்புவோர் டெபாசிட்டாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப அளிக்கப்படும். மேலும் இதற்கான முன்பதிவானது ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் செப்டம்பர் 2017ல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிற்கான ஸ்மார்ட் ஃபோன்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போன் இளம் இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான ஸ்மார்ட் ஃபோன் என்று ஜியோ இந்த போனிற்கு அடைமொழி சூட்டியுள்ளது.


ஜியோ ஆப்கள்
மாதந்தோறும் ரூ153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்
ஜியோ ஃபோனில், நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.


ஜியோ ஃபோன் கேபிள் டிவி
இதே போன்று ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.


அடுத்த புரட்சி
தொலைதொடர்பு சேவையில் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா இணையதள சேவைகளை தொலைபேசியில் வழங்கி மக்களிடையே பிரபலமடைந்த ரிலையன்ஸ் ஜியோவின், இந்த அறிவிப்பு ஸ்மார்ட் ஃபோன் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.