Technology News In Your Hand

கலக்கும் பிஎஸ்என்எல் : வெல்கம் ஆபர்; ரூ.8/-மற்றும் ரூ.19/- ரீசார்ஜ் அறிமுகம்.!

டெலிகாம் துறையில் நிலவும் தீவிர போட்டி காரணமாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனம் தொடர்ந்துபுதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஜியோ பாணியிலான ""வெல்கம் ஆபரை" அறிவித்துள்ளது.

இந்த புதிய ஆபரின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 500 எம்பி அளவிலான இலவச மொபைல் டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. அதாவது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைல்சேவைகளின் கீழ் இணையும் புதிய இணைப்புகளுக்கு 500/350 எம்பி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்குமஇந்த இலவச 500 எம்பி டேட்டாவை சேவையை அணுகப்பெற்ற முதல் 30 நாட்களில் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்த திட்டம், கிழக்கு மண்டல வாடிக்கையாளர்களுக்கு முதல் 3 நாட்களுக்கான வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகளையும், இதர மண்டல வாடிக்கையாளர்களுக்கு (30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டிய) 350 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் எஸ்டிவி ரூ.19/- திட்டமானது, நிமிடத்திற்கு 15 பைசா என்ற விகிதத்தில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளையும், 35 பைசா என்ற விகிதத்தில் இதர நெட்வெர்க் உடனான அழைப்புகளை வழங்கும். இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்பிஎஸ்என்எல் நாடு முழுவதும் பல தொலைத் தொடர்பு வட்டங்களில் அதன் சேவைகளை வழங்குகிறது. ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்