Technology News In Your Hand

இன்ஸ்டாகிராமில் உள்ளபடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்


லட்சக்கணக்கான புகைப்படங்கள் பலராலும் பகிரப்படும் பிரபலமான ஊடகங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்றாக உள்ளது. கடந்த 2017 செப்டம்பர் மாதம் வரை சுமார் 800 மில்லியன் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த 2015 அக்டோபர் மாதத்தில் இருந்து 40 பில்லியனுக்கும் மேலான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஏப்ரல் வரை, இன்ஸ்டாகிராம் டையரெக்ட் 375 மில்லியன் சுறுசுறுப்பான பயனர்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2017 ஜூன் வரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் செயல்பாட்டிற்கு 250 மில்லியனுக்கும் அதிகமான சுறுசுறுப்பான பயனர்கள் கிடைத்துள்ளனர்.

இந்தப் புகைப்பட பகிர்வு அப்ளிகேஷன் மூலம் புகைப்படங்களுக்கு விருப்பம் (லைக்) தெரிவிக்கலாம் அல்லது அதை புக்மார்க் செய்து வைத்தால், தேவைப்படும் போது மீண்டும் பார்க்கலாம். பல்வேறு காரணங்களுக்காக சில நேரங்களில் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய நீங்கள் விரும்பலாம். ஏனெனில் குறிப்பிட்ட புகைப்படத்தை மிகவும் விரும்பி, ஒரு மொபைல்போனின் வால்பேப்பராக வைக்க நீங்கள் ஆசைப்படலாம் அல்லது ஒரு படத்தை மிகவும் உங்களைக் கவர்ந்திருக்கலாம்.

ஆனால் அங்கே பதிவிறக்கம் செய்வதற்கான பொத்தான் அளிக்கப்படவில்லை என்பதற்காக, அது சாத்தியமில்லை என்று அர்த்தமல்ல. எனவே இன்ஸ்டாகிராமில் இருந்து முழு பகுப்பாய்வுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்யும் படிகளைக் குறித்து இந்தச் செய்தியில் பட்டியலிட்டு உள்ளோம்.

படி 1: முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று, 'இன்ஸ்டாஅப்' அப்ளிகேஷனை நிறுவ வேண்டும்.

படி 2: இந்த அப்ளிகேஷனைத் திறக்கும் போது, மேலே தேடல் பார் என்ற ஒரு தேர்வைக் காணலாம்.

படி 3: இந்த தேடல் பாரில், குறிப்பிட்ட புகைப்படம் உள்ள ப்ரோஃபைலின் பெயரை உள்ளிடவும்.

படி 4: அந்த புகைப்படம் பதிவிறக்கம் ஆகும் வரை காத்திருந்து, புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய தட்டவும்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படத்தை விண்டோஸ் அல்லது மேக் கொண்ட உங்கள் லேப்டாப்பில் பதிவிறக்க செய்ய வேண்டுமானால், கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றவும் படி 1: உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இன்ஸ்டாகிராமைத் திறக்கவும்.

படி 2: இப்போது நீங்கள் சேமிக்க விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுத்து / கண்டுபிடித்து, அதன் மீது கிளிக் செய்யவும்.

படி 3: அதை கண்டுபிடித்துவிட்டால், முகவரி பாரில் இருந்து குறிப்பிட்ட புகைப்படத்தின் யூஆர்எல்-லை நகலெடுக்கவும்.

 படி 4: இப்போது டவுன்லோடுகிராம்ஸ் (https://downloadgram.com/) இணையதளத்திற்குச் செல்லவும்.

படி 5: நீங்கள் நகலெடுத்த ஆட்டோ ஜெனரேட்டேட் இன்ஸ்டாகிராம் இணைப்பின் யூஆர்எல்-லை பதிவிடவும்

படி 6: இப்போது, பதிவிறக்கம் பொத்தானைக் கிளிக் செய்து, அந்த படத்தைச் சேமிக்கவும்.