Technology News In Your Hand

ஜீன் 30 முதல் பழைய பிளாக்பெரி, நோக்கியா போன்களில் வாட்ஸ்அப் இயங்காது!


வரும் ஜூன் 30 முதல் பழைய பிளாக்பெரி மற்றும் நோக்கியா போன்களில் வாட்ஸ்அப் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஓ.எஸ்.,களுக்கு வாட்ஸ்அப் அவ்வப்போது தனது சேவையை நிறுத்துவது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்கு வாட்ஸ்அப் தனது சேவை நிறுத்துகிறது. அப்படி முன்னதாக  ஐ.ஓ.எஸ் 6, விண்டோஸ் 7 போன், ஆண்ட்ராய்டு 2.3.3-க்கு முந்தைய வெர்ஷன்களுக்கு ஏற்கெனவே வாட்ஸ்அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

அதேபோல் இந்தமுறை சில வெர்ஷன்களுக்கு வாட்ஸ்அப் தன் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி முதல் சில வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இயங்காது. அதாவது தற்போது பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10, நோக்கியா S40 மற்றும் நோக்கியா S60 இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் ஜூன் 30-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. அதனால் இந்த வெர்ஷன் போன் வைத்திருப்பவர்கள் அடுத்த வெர்ஷன்களுக்கு போனை அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும்.