பரவலாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தப்படும் ஆண்டராய்ட் இயங்குதளம் ஆங்கில எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட பெயருடன் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வெர்ஷனின் பெயரும் உணவுப் பொருள் ஒன்றின் பெயரிலேயே இருக்கும்.கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்ட் கடைசியாக வெளியிட்டது ஆண்ட்ராய்ட் நோகட் (Android NNougut). இதற்கு அடுத்து O என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயருடன் அடுத்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனை வெளியிட உள்ளது.
இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனின் பெயர் நாளை வானில் சூரிய கிரகணம் தோன்றும் நேரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓரியோ (Oreo)என்ற பெயர் வைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.நாளைய முழு சூரிய கிரகணத்தை கூகுள் நிறுவனம் வெர்சுவல் ரியாலிட்டி வீடியோவாக ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது.