ஸ்மார்ட்போன்கள் ஆயிரம் கோளாறு இருந்தாலும், மிக முக்கியமானதாக இருப்பது அதிக வெப்பம் தான் எனலாம். நம்ம ஊருக்கு போட்டியா ஸ்மார்ட்போன்களும் சூடாகின்றன. ஆனால் ஏன் இவ்வாறு சூடாகிறது, இதை எப்படி சரி செய்ய வேண்டும்?
அதிகப்படியான கேம்களை விளையாடும் போதும், வீடியோக்களை பார்க்கும் போதும் ஸ்மார்ட்போன் சூடாவது இயற்கையான ஒன்று தான். ஆனால் அளவுக்கு அதிகமாக சூடாகும் போது ஸ்மார்ட்போனின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும்.
ஸ்மார்ட்போன் சூடாவது பல்வேறு காரணங்கள்- அதாவது பிராசஸர், அவற்றில் பயன்படுத்தப்படும் செயலிகள், எவ்வாறான மல்டி-டாஸ்கிங் உள்ளிட்டவற்றை சார்ந்தது. மற்ற காரணங்களாக ஸ்மார்ட்போனினை நேரடி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைப்பது இருக்கிறது. அதிகப்படியான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன.
அதிகளவு சூடாகும் போது பேட்டரி பேக்கப் நேரம் குறையும். மேலும் இதனால் உங்களது ஸ்மார்ட்போன் வெடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஜியோ 4ஜி வரவு நம்மில் பலரையும் மொபைல் டேட்டாவினை ஆன் செய்து வைக்க பழக்கி விட்டது. இண்டர்நெட் பயன்படுத்தாத போதும் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் லொகேஷன், ஜிபிஎஸ், ப்ளூடூத், வைபை போன்ற ஆப்ஷன்களும் பயன்படுத்தாத நேரங்களில் ஆன் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறான அம்சங்கள் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது பேட்டரி சீக்கிரம் காலியாகி விடுவதோடு, போனின் வெப்பத்தை அதிகரித்து விடுகிறது.
அதிகப்படியான செயலிகளை பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போன் சீக்கிரம் சூடாகி விடும். இதனால் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகளை நிறுத்தி வைக்கலாம். இதை செய்ய சிகிளீனர், கிளீன்மாஸ்டர் போன்ற செயலிகளை பயன்படுத்தலாம்.
அனைத்து செயலிகளையும் சீராக அப்டேட் செய்து கொள்வது நல்லது. இவ்வாறு செய்யாத போது செயலிகள் சீரற்ற முறையில் இயங்கும், இதனால் ஸ்மார்ட்போன் சூடாக துவங்கும்.
நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செலிகளை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும். சில சமயம் நீங்கள் பயன்படுத்தாத செயலிகளும் பேக்கிரவுண்டில் இயங்கி கொண்டிருக்கும், இதனால் பிராசஸர், ஸ்டோரேஜ் மற்றும் இதர இன்டெர்னல் பாகங்களை பயன்படுத்துவதால் ஸ்மார்ட்போன் சூடாகும்.
ஸ்மார்ட்போன்களை அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். போலி சார்ஜர்களில் சார்ஜ் செய்யும் போது மின்சாரம் சீரற்ற முறையில் ஸ்மார்ட்போனிற்கு செலுத்தப்படும். இதனால் ஸ்மார்ட்போன் சூடாவதோடு பல்வேறு இதர பிரச்சனைகளும் ஏற்படலாம்
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.